630 ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம் தொடக்கம் : முதல்வர்…!

சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் பழனிசாமி குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதிலும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் முதற்கட்டமாக இன்று 630 கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டுமே 47 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை 8 மணி நேரம் செயல்படும் இந்த மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு மக்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் சாதாரண சளி, காய்ச்சலுக்கு அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 1400 சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் மின் கிளினிக்குகள் 200 என மொத்தம் 2000 கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply