தங்கம் விலை மீண்டும். ரூ. 37,000க்கு கீழ் குறைந்தது…!

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை எட்டி விடும் என்ற அச்சம் எழுந்தது.

கடந்த வாரத்தை உயர்வுடன் முடித்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் தொடங்கி வைத்துள்ளது.காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 240 குறைந்து ரூ.4,627-க்கும், சவரனுக்கு ரூ.240 சரிந்து ரூ.37,016-க்கு விற்பனையாகியது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தே காணப்பட்டுள்ளது. மாலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.368 குறைந்து ரூ.4,611-க்கும், சவரனுக்கு ரூ.368 சரிந்து ரூ.36,888-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply