குமரியில் தென்மாவட்ட அளவிலான கராத்தே போட்டி…!

கன்னியாகுமரியில் தென்மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர்.

10 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் ராஜ் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட கராத்தே கழக பொறுப்பாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் ராமசாமி வரவேற்றார். பஞ்சலிங்கபுரம் பஞ்., தலைவி சிந்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

சீனியர் பிரிவில் கன்னங்குளம் மெகா, ஜூனியர் பிரிவில் அஞ்சுகிராமம் மோனிகா தங்கப்பதக்கம் வென்றனர். தூத்துக்குடி மாவட்ட கராத்தே கழக பொறுப்பாளர் சங்கர்குமார் நன்றி கூறினார்.

Leave a Reply