“கடைசியா எங்கிட்ட இவ்ளோ தா சொன்னா“ சித்ராவின் தாயார் விஜயா கண்ணீர் பேட்டி!!

எந்த தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக மாட்டார்.தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தாய் விஜயா பேட்டி.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சித்ராவும்,ஹேம்நாத்தும் திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்ததை அடுத்து இந்த வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தொடர்ந்து 5 நாட்களாக நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.இதற்காக சித்ராவின் தந்தை கனகராஜ், தாய் விஜயா,அண்ணன் சரவணன், அக்கா சரஸ்வதி ஆகியோர் ஆஜராகினர். இதில் ஒவ்வொருவரையும் ஆர்.டி.ஓ தனித்தனியாக விசாரணை செய்தார்.

தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் வெளியே வந்த சித்ராவின் பெற்றோர் செய்தியாளர்களை சந்தித்தனர். விசாரணை முடிந்த பின்பு முழு தகவலை அளிக்கிறோம்.ஊடங்கள் தவறான தகவலை தருகின்றனர் என்றனர்.

மேலும் எந்தவொரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக மாட்டார்.சித்ரா தற்கொலைக்கு முழுக்க, முழுக்க ஹேம்நாத் தான் காரணம் அதற்கான விவரங்களை ஆர்.டி.ஓ விசாரணையில் கூறியுள்ளோம். விசாரணைக்கு அழைக்கும் போது மீண்டும் ஆஜராவோம் என்றனர்.

Leave a Reply