பெங்களூரில் அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்…!

ஜனவரியில் கட்சி தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த் இன்று பெங்களூரில் இருக்கும் தனது அண்ணன் சத்ய நாராயணாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

2017ம் ஆண்டில் இருந்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஒரு முடிவு தெரிந்து விட்டது. 2 நாட்கள் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதம் தான் கட்சி தொடங்கவிருப்பதாகவும் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வரும் 31ம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்தார்.

அதன் படி, தற்போது ரஜினி தனது கட்சிப் பணிகளை தீவிப்படுத்தி இருப்பதாகவும் கட்சியின் மேற்பார்வையாளர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பாட்டிற்கும் தமிழருவி மணியனுக்கும் அர்ஜுன மூர்த்திக்கும் சிறப்பு அதிகாரங்களை வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பெங்களூரு சென்ற ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார். அவர் 14ம் தேதி வரை பெங்களூரில் தங்கி இருக்க போவதாகவும் கட்சி தொடர்பாக தனது நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளையும் பெங்களூரிலேயே தனது அண்ணனுடன் கொண்டாடவிருப்பதாகவும் தெரிகிறது. அதன் பின்னர், 15ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படம் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply