குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!

பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களுக்கு வழங்கக்கோரி குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் ஜாபர் அலி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தலைவர் முகைதீன் நாகூர் மீரான் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பச்சைதமிழகம் கட்சி நிறுவனர் சுப.உதயகுமார், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது ஜிஸ்தி, எஸ்.டி.டி.யு. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது நூஹ், எஸ்.டி.பி.ஐ. மாநகர தலைவர் மீரா முகைதீன் உள்பட அமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Leave a Reply