கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவில் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

கலெக்டரின் உத்தரவு படி கோட்டாறு புனித சவேரியார் பேராலய நிர்வாகிகளை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் வைத்து ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நாகர்கோவில் ஆர்டிஓ மயில், போலீஸ் டிஎஸ்பி வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இனி வரும் திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆலய வளாகத்தில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. மாநகர் நல அலுவலர் கின்சால், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கோட்டாறு புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply