ராமபுரம் சமத்துவபுரத்தில் ரூ.60 லட்சத்தில் கூட்டமைப்பு கட்டிடம் தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்..

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ராமபுரம் பஞ்சாயத்தில் சமத்துவபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சத்தில் கூட்டமைப்பு கட்டிடம் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற் கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

முன்னதாக இதற்கான பூமி பூஜையை சிவாச்சாரியர்கள் கார்த்திக் பட்டர், சங்கர நாராயண பட்டர் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். ராமபுரம் பஞ்சாயத்து தலைவி நீலா, அகஸ்தீஸ்வரம் யூனியன் கவுன்சிலர் அருண் காந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள கூட்டமைப்பு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், தேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நாகராஜன், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கந்தன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன்,

டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மணிகண்டன், பேரூர் கழக செயலாளர்கள் ஆடிட்டர் சந்திரசேகரன், கைலாசம், பஞ்சாயத்து தலைவர்கள் இசக்கிமுத்து, சுடலையாண்டி, வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், ராமபுரம் ஊராட்சி செயலாளர் செல்லபெருமாள், அருள் ஜெயசிங், அ.தி.மு.க. அவைத்தலைவர் தம்பிதங்கம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காலபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply