கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டம் தழுவிய தர்ணா போராட்டம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கல், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், அரசு வழங்கும் அம்மா சிமென்ட் விநியோகத்தை முறைப்படுத்தவும், பல ஆண்டு கணக்கில் பணப்பயன் வழங்காமல் நல வாரிய அலுவலகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓய்வு ஊதியம் இயற்கை மற்றும் விபத்து,

மரணம், குடும்ப ஓய்வூதியம், திருமணம் போன்ற கேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய வேண்டும் என்பன போன்ற 11 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, நாகர்கோயில், கிள்ளியூர், கன்னியாகுமரி உள்பட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சுமார் 200 இடங்களில் மாவட்டம் தழுவிய தர்ணா போராட்டம் நடந்தது.

தக்கலை ஒன்றியம் சார்பில் கூழக்கடை, செம்பருத்திவிளை, திருவிதாங்கோடு, பெருஞ்சிலம்பு, வாழ்வச்சகோஷ்டம், கண்டன்விளை உட்பட 6 ஊர்களில் நடந்தது. திருவிதாங்கோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு தேவதாஸ் தலைமை தாங்க சிதம்பரம் முன்னிலை வகித்தார். காளி பிரசாத் கோஷங்கள் இட்டு தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார்.

சந்திரகலா, ராஜ், குமாரசாமி ஆகியோர் போராட்டம் குறித்து பேசினர். ஸ்டீபன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Leave a Reply