தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு…!

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் குமரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுமார் 27 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 17 ஆண்டுகளாக குறைந்த தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று காலத்தில் கூட அரசின் ஆணையை ஏற்று பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் நோய் தொற்று அதிகம் பரவ காரணமாய் இருப்பதால் கடையின் பணி நேரத்தை காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படுவதாக அனுமதித்து வழக்கத்தில் இருந்து வந்தது இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் குறைந்து உள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்துக்கு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கும் பொதுமக்களுக்கும் சமூகக் குற்றச் செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கு தகுந்த நேரம் ஆக உள்ளதால் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றாமல் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படுவதற்கு உரிய உத்தரவுகள் வழங்கி அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாநில செயலாளர் மோஸ்லின் பியர்சன் மாவட்ட தலைவர் பாஸ்கர், செயலாளர் மணிகண்டன் உட்பட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply