தக்கலை தாலுகா அலுவலகம் முன் விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்…!

விலைவாசி உயர்வை கண்டித்து கன்னியாகுமரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி வைத்து அழும் போராட்டம் நடைபெற்றது.

தக்கலை தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்கவும், புதுச்சேரி மற்றும் கேரளாவை போல பண்டிகை கால சிறப்பு அங்காடிகளை திறந்து மானிய விலையில் பொருட்களையும் வழங்கவும் வலியுறுத்தினர்

Leave a Reply