தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில்…தொடர்ந்து உயரும் தங்கம் விலை..!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்ந்தே காணப்பட்டுள்ளது.

அதாவது, காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.38,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,802-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.66.30க்கு வர்த்தகமாகி வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது, தங்கம் வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply