நாகர்கோவில் அருகே தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

நாகர்கோவில் அருகே நேசமணிநகர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(32). இவரது மனைவி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராசி(28). இவர்களுக்கு அக்சயா(5) மற்றும் அனியா (3) என இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வந்த ரஞ்சித்குமார் கடந்த 2019 அக்டோபர் மாதம் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அதிலிருந்து மன வேதனையிலிருந்த ராசி சமீபத்தில் கணவரின் நினைவு நாள் நிகழ்ச்சி அவரை மேலும் வருத்தமடைய செய்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தூக்கமாத்திரை கொடுத்து தூங்கவைத்து விட்டு தானும் தூக்க மாத்திரை தின்று விட்டு உடலில் வார்னிஷ் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக தகவல் கிடைத்த நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி வேணுகோபால் நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் ராசி தனது இறப்பு சம்பந்தமாக அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்ததாகத் தெரிகிறது. மேலும் அவரது செல்போனில் வீடியோ ஒன்றும் பதிவிட்டுள்ளார்.

பின்னர் போலீசார் குளியலறையில் கிடந்த ராசியின் உடல் மற்றும் படுக்கை அறையில் கிடந்த குழந்தைகளின் உடல்களை ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இது பற்றிய தகவலை உடுமலையில் ராசியின் குடும்பத்தாருக்கும் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ராசியின் உறவினர்கள் ராசி , குழந்தைகளின் உடலைப் பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Leave a Reply