மேலாண்மை இயக்குனரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!

இரவிபுதூர்கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன்கள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இரவிபுதூர்கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ராபர்ட் கிளைவ் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் லாரன்ஸ், மகேஷ்லாசர், தவசிமுத்து, ராஜபாண்டியன், தி.மு.க.வைச் சேர்ந்த கலைரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply