கோட்டாரில் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்… சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார். இதையடுத்து வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியை நல்லபாக்கியலெட் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகராஜன், மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சிவராஜ், நிர்வாகிகள் ஷேக்தாவூது, எம்.ஜே.ராஜன், சுரேஷ் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply