குமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கேட்பு கூட்டம்…!

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுரையின்படி குமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு சப்-கலெக்டர் சரண்யா அரி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் தனி தாசில்தார் சேகர், அனைத்து தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

அரசியல் கட்சிகள் சார்பில் ஜெயகோபால், சலாம் (அ.தி.மு.க.), ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்), ஜெகதீசன் (பா.ஜனதா), வர்க்கீஸ் (தி.மு.க.), செல்வகுமார், நாராயணன், மணிகண்டன் (தே.மு.தி.க.), எஸ்.இசக்கிமுத்து, ஐ.இசக்கிமுத்து (இந்திய கம்யூனிஸ்டு), மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைவிட மாற்றம், வாக்குச்சாவடி கட்டிடங்கள் மாற்றம், வாக்குச்சாவடிகளில் பிரிவுகள் மறுசீரமைப்பு போன்றவை குறித்து கருத்து கேட்கப்பட்டது.

Leave a Reply