குமரி பாராளுமன்ற இடைத் தேர்தலில் சிவசேனா களம் இறங்குகிறது…!

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடப் போவதாக மாவட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி சிவசேனா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பத்மநாபபுரம் அருகே இலுப்பகோணத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயராஜன் தலைமை தாங்க பொதுச் செயலாளர் ராஜன், செயலாளர் ஜெய மனோகர், பொருளாளர் அர்ஜுனன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித் குமார் வரவேற்றார். அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர் ஒன்றிய தலைவர்கள் கண்ணன், பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மணி, சுஜித் குமார், திருவட்டார் மேல்புறம் ஒன்றிய மகளிர் அணி தலைவர்கள் அனிதா குமாரி, சாந்தகுமாரி, குமாரபுரம் பஞ்ச் கிளை தலைவர் ஸ்ரீகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜி நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால சாகோப் தாக்ரோஜின் நினைவு‌ நாளான நவம்பர் 17ஆம் தேதி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துவது எனவும், பாரதப் பள்ளி, ஆனாம்பிகை நகர், அம்பலக் கடை, கொக்கஞ்சி ஆகிய பகுதிகளில் நிழல் தரும் மரங்கள் நட்டு பராமரிப்பது எனவும்,

கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவினை மாற்றிட மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கேட்டும் நடைபெற இருக்கின்ற நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சிவசேனா சார்பாக தனித்துப் போட்டியிடுவது எனவும்,

அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட சிவசேனா நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply