இரவிபுதூர்கடை அருகே கோவில் உண்டியல் உடைப்பு காணிக்கை திருட்டு

இரவிபுதூர்கடை அருகே உள்ள குன்னம் பாறை பகுதியில் ஸ்ரீவன சாஸ்தா கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பூசாரி சிவன் என்பவர் சம்பவத்தன்று காலையில் கோயிலை திறந்து பூஜை முடித்த பின் கோவிலை பூட்டி விட்டு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வழக்கம் போல் கோயிலை திறக்க பூசாரி வந்தார் அப்போது கோவில் காம்பவுண்ட் பக்கம் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.

மேலும் கோவில் அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம கில்லாடிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து இருப்பதை பார்த்து கோவில் செயலாளர் அனில் குமாருக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து கோவில் செயலாளர் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து தலைமை காவலர் செல்வின் வழக்கு பதிவு செய்தார். கோவிலில் இரண்டு உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்ற கில்லாடிகளை போலீசார் தேடி வருகின்றனர். கோவில் உண்டியல் உடைப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply