தமிழகத்தில் நாத்திகத்திற்கு இடமில்லை : பொன். ராதாகிருஷ்ணன்

தமிழக அரசின் உரிமைகளை மத்திய அரசுக்கு அதிமுக தாரைவார்த்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருப்பது பொய்யான தகவல் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தக்கலை அருகே வில்லுக்குறி செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் மோடி அரசு ஒருபோதும் செயல்படாது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் அனைத்து கட்சிகளுக்கும் ஜுரம் வந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஜன்னியே வந்து விட்டது. தமிழகத்தில் நாத்திகத்திற்கு இடமில்லை, நாத்திகத்தை பரப்பினால் தோற்றுப் போவார்கள் என்பதால் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டார்.

விலைப்போகாத பொருளை விற்க முடியாது என்பதால் அண்ணா கூட ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனக் குறிப்பிட்டார். நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலில் வரலாம், அவர்கள் அரசியலுக்கு வருவதால் பலன் பெறுவார்கள் அல்லது பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வருகை தமிழக மக்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். திருமாவளவன் கூறிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. மண்ணின் பாரம்பரியம் சார்ந்த விவகாரம். மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் உடனடியாக வந்தாலும் அதனை பாஜக சந்திக்கும்” எனக் கூறினார்.

Leave a Reply