ஜார்க்கண்டில் கைது செய்த பாதிரியாரை விடுதலை செய்யக்கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்…!

ஜார்க்கண்டில் வசித்து, பழங்குடி மக்களின் உரிமைக்காக பாடுபட்ட இயேசு சபையைச் சேர்ந்த அருட்பணியாளர் ஸ்டேன்சுவாமி என்ற பாதிரியாரை தேசிய புலனாய்வு அமைப்பு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் திருத்தமிழ்த்தேவனார் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட நிலவுரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் போஸ், பெரியார் தொழிலாளர் கழக தலைவர் நீதியரசர், இந்திய புரட்சிகர மார்ச்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமார், எம்.சி.பி.ஐ. (யு) மாவட்ட செயலாளர் சுலிப், ஆதிதமிழர் பேரவை மாவட்ட தலைவர் மாரிமுத்து, பெண்கள் இணைப்புக்குழு லிட்வின், பிரான்சிஸ், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் நலச்சங்க நிர்வாகி ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply