மார்த்தாண்டம் சந்தை அருகில் மனித பாதுகாப்பு கழகம் ஆர்ப்பாட்டம்…!

மார்த்தாண்டம் சந்தை அருகில் உள்ள உரம் தயாரிக்கும் கிடங்கால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அந்த உரம் தயாரிக்கும் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி மனித பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மார்த்தாண்டம் பஸ்நிலையம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் ஜெய் மோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மனித பாதுகாப்பு கழகத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply