தக்கலை தலைமை தபால் நிலையத்தில் தபால் தலை கண்காட்சி…!

தக்கலை தலைமை தபால் நிலையத்தில் கடந்த 9-ந் தேதி முதல் 15-ந் தேதி (அதாவது நேற்று) வரை தபால் வாரமாக கொண்டாடப்பட்டது. விழாவை தலைமை தபால் அதிகாரி அஜிகுமார் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அதன் ஒரு அங்கமாக தபால்தலை கண்காட்சி நடைபெற்றது.

இதனை உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் ராமசாமி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை சமூக இடைவெளியுடன் ஏராளமானோர் கண்டுகளித்தனர். வார நிறைவு நாளான நேற்று மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சலக ஊழியர்களை பாராட்டினார். மேலும் தபால் துறையின் ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு செல்ல ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

மேலும் விழாவில், பத்மநாபபுரம் சார்பு நீதிபதி ரேணுகா தேவி, முதன்மை உரிமையியல் நீதிபதி தர்மபிரபு, கூடுதல் உரிமையியல் நீதிபதி விஸ்வதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தது மட்டுமல்லாமல், தபால் ஊழியர்களையும் பாராட்டினர்.

Leave a Reply