அமமுக அலுவலகத்தில் மறைந்த வெற்றிவேல் உருவப்படத்திற்கு டிடிவி தினகரன் மலர்தூவி அஞ்சலி…!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும் அமமுக பொருளாளருமான வெற்றிவேல் நேற்று காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அமமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உருவப்படத்தை திறந்து வைத்து டிடிவி தினகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் சி.ஆர். சரஸ்வதி, செந்தமிழன் உள்ளிட்டோரும் வெற்றிவேல் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர் வெற்றி இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது. இயக்கத்தின் மீதும், நம் மீதும் அவர் காட்டிய அளப்பரிய அன்பின் வழியாக எப்போதும் நம்மோடு இருப்பார் நம்முடைய வெற்றிவேல்! துணிச்சலின் இருப்பிடமாகவும், தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த கழகத்தின் பொருளாளரும், என்னரும் நண்பருமான திரு.வெற்றிவேல் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply