முதல்வரின் தாயார் மறைவு…திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நல குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இதையடுத்து தவுசாயம்மாள் இன்று நள்ளிரவு 1 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அவரது மகனும் தமிழக முதல்வருமான பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். தற்போது முதல்வரின் தாயார் தவுசாயம்மாள்இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தவுசாயம்மாள் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல் என்று கூறியுள்ளார்.

சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் பழனிசாமியின் தாயார் தவசாயம்மாள் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

Leave a Reply