நாகர்கோவில் பரபரப்பு….கலெக்டர் அலுவலகத்தில் தனி ஆளாக தரையில் அமர்ந்து கோரிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து தீர்வு கண்டு வந்தனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனுக்கள் கொடுக்க கலெக்டர் அலுவலகம் வர வேண்டாம்.

மாவட்டத்தில் உள்ள இ–சேவை மையங்கள் மூலம் தகுந்த ஆவணங்கள் கொண்டு பதிவு செய்து அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களாக மனுக்களை மாவட்ட மக்கள் அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனி மனிதனாக வந்து திடிரென தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்புக்கு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கோரிக்கை வலியுறுத்திய நபரை அகற்றினர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தியவரிடம் விசாரித்த போது பள்ளியாடி பகுதியை சேர்ந்த வினோ டி ஜாண் என்றும் தன்னுடைய சொத்து சம்மந்தமாக கலெக்டரை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்

Leave a Reply