இந்து முன்னணி சார்பில் கல்குளம் தாலுகா அலுவலகம் அருகே பாரம்பரிய முறைப்படி நவராத்திரி சுவாமி ஊர்வலம் கவனயீர்ப்பு போராட்டம்…!

நவராத்திரி சுவாமி ஊர்வலத்தை பாரம்பரிய முறைப்படி பாரம்பரிய முறைப்படி நடத்த இடம் கேட்டு இந்து முன்னணி சார்பில் கல்குளம் தாலுகா அலுவலகம் அருகே நடந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவிற்காக குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் பல்லக்கில் அலங்கரித்து பக்தர்கள் விரதமிருந்து தங்களது தோள்மீது சுமந்து செல்வது வழக்கம் .இந்த நிகழ்ச்சியானது பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியமிக்க வரலாற்று சிறப்புடையதாகும் .இந்த நிகழ்ச்சியை கேரள அரசு மற்றும் தமிழக அரசும் இணைந்து நடத்த வேண்டுமென்ற அரசு ஆணையும் உள்ளது .இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ரூபாய் 15 கோடி தமிழக தேவசம் போர்டுக்கு வைப்பு நிதியாக தமிழக அரசு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்நிகழ்ச்சி பாரம்பரியமும் ஆன்மீகமும் கலந்துள்ள நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி நடத்தாமல் ஆகம விதிகளுக்கு புறம்பாக நடத்த விரும்புவதாக தகவல் உள்ளது.பாரம்பரிய முறைக்கும் ஆன்மீக நெறிமுறைகளுக்கும் எதிராக செயல்படும் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும் மக்களின் ஆன்மீக உணர்வை புண்படுத்தாமல் பாரம்பரிய தெய்வீக முறைகளை கடைபிடித்து நவராத்திரி விக்கிரக நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் இந்த கண்டன கவனயீர்ப்பு போராட்டம் நடந்தது.

இதையொட்டி நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் மேடை அமைக்க ஏற்பாடு செய்து இருந்ததை அறிந்த காவல்துறை சம்பவ இடம் விரைந்து வந்து சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் டிஜிபி கணேசன் டிஎஸ்பி பீட்டர் பால் துறை, தக்கலை உட்கோட்ட டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் ஈடுபட்டு மேடை அமைக்கும் பணியை நிறுத்த கேட்டதன் அடிப்படையில் மேடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீஸ் படையினர் அந்தப் பகுதியில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மாற்றிவிட கேட்டதின் அடிப்படையில் அனைவரும் தங்களது வாகனங்களை வேறு இடங்களில் நிறுத்தினர்.

தொடர்ந்து நடந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன் தலைமை தாங்க தக்கலை ஒன்றிய இந்து முன்னணி துணைத் தலைவர் ஜான்சன் மற்றும் அபிலாஷ், ரஞ்சித் உட்பட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜேந்திரன் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆர் கே கண்ணன், ராஜேஷ்வரன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் ,மாவட்ட பாஜக துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் கவனயீர்ப்பு போராட்டம் குறித்து பேசினர். மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் போராட்டத்தை முடித்து வைத்தார்.இந்த போராட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் .

நிகழ்ச்சியில் மத்திய அரசு வழக்கறிஞர் வேலு தாஸ் மற்றும் மாவட்ட பாஜக செயலாளர் உண்ணி கிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி ,நகர ஒன்றிய தலைவர்கள் நாகராஜன் ,மனோகர குமார் மற்றும் சுரேஷ்குமார் ,தீபக், ஸ்ரீகுமார் , பிரமுகர் கொசி ராமதாஸ்,ஜோதிஷ்குமார் உட்பட இந்து முன்னணி ஆர்எஸ்எஸ், பாஜக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தினால் அரண்மனை சாலை வழி சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவுப்படி தக்கலை உட்கோட்ட டி எஸ் பி ராமச்சந்திரன் நேரடி வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply