கோணம் அரசு கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேரலாம் முதல்வர் தகவல்

நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுசீலாபாய் வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப்பட்ட வகுப்புகளுக்குரிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. ஆனால் இன்னும் சில பாடப்பிரிவுகளில் (பொருளியல், வரலாறு, வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல்) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. எனவே உயர் கல்வித்துறையின் வழிகாட்டலின்படி காலியிடங்கள் நிரப்பட உள்ளன. விருப்பம் உள்ள மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 13-ந் தேதி வரை கல்லூரி அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்ப படிவத்தை பெற்று கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply