உத்திரபிரதேச சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வேண்டி திருவட்டார் பேருந்து நிலயம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்திர பிரதேச மாநிலத்தை சர்ந்த மனிஷாவால்மீகியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வேண்டியும், திருவட்டார் பேருந்து நிலயம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு காங்கிரஸ் மனித உரிமை துறை பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார் திருவட்டார் நகர காங்கிரஸ் தலைவர் சிவசங்கர், ஊராட்சி ஒன்றிய கவுண்சிலர் ஜெயஸ்ரீ ராஜேஷ், மாவட்ட கவுண்சிலர் செலின்மேரி,

அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ரவிசங்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ், மகிழா காங்கிரஸ் மாநில துணை தலைவர் லைலா ரவிசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜாக்சன், விவசாய காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply