மணவிளை அம்மன் கோயில் ரோட்டில் இன்டர்லாக் கட்டைகள் பதிக்கும் பணி துவக்கவிழா

வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அம்மன் கோயில் ரோட்டில் இன்டர்லாக் கட்டைகள் பதிக்கும் பணிக்கான துவக்கவிழா நடந்தது.குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு மணவிளை ஊர் தலைவர் சிவதாணுலிங்கம் தலைமை தாங்கினார்.

வெள்ளிச்சந்தை பஞ்., தலைவர் தாமஸ் கென்னடி முன்னிலை வகித்தார். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அனுஷாதேவி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வெள்ளிச்சந்தை பஞ்., உறுப்பினர்கள் ஜோதி மற்றும் முருகேசன், குருந்தன்கோடு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் V.C.கண்ணன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply