குமரியில் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு…!

குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜன் தலைமையில் குமரியில் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

அயோத்தி ராமஜென்ம பூமியில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு 1996 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய கட்டுமானம் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக, இந்து இயக்கங்களை சேர்ந்த 35 பேர் மீது அன்றைய உத்திரபிரதேச அரசு வழக்குப் பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்தது.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தடையை மீறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். பாஜக மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இத்தகைய போராட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. ஜாதி மத மோதல்களை தூண்டும் விதமாக போராட்டங்கள் அமைகின்றன.

எனவே நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அமைப்புகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply