ஆரோக்கியபுரம் மீனவக் கிராமத்தில் நீலபுரட்சித் திட்டத்தின்கீழ் 14 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

தமிழக அரசின் நீலபுரட்சித் திட்டத்தின்கீழ் வீடுகள் இல்லாத மீனவா்களுக்கு வீடு கட்டும் வழங்கும் திட்டத்தில் ஆரோக்கியபுரத்தில் 14 மீனவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு லீபுரம் ஊராட்சித் தலைவா் எல். ஜெயகுமாரி லீன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினாா்.

இதில், ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஆரோக்கியபுரம் ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை மதன், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ். அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ.நீலபெருமாள், அதிமுக நிா்வாகிகள் கவிஞா் டி.சதாசிவம், பா.தம்பித்தங்கம், பி.வின்ஸ்டன், ஊராட்சி உறுப்பினா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Leave a Reply