ஸ்டெல்லா மேரிஸ் பொரியல் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு

நேற்று (02.10.2020) ஸ்டெல்லா மேரிஸ் பொரியல் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு ஆன்லைன் வழியில் கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் நாசரேத் சார்லஸ் மற்றும் துணை தலைவர் திருமதி சுமிதா சார்லஸ் அவர்களின் அனுமதியுடன் நிர்வாக அதிகாரி திரு கரோல் ஜூட்சன் மற்றும் இயக்குனர் திரு. P. ரஞ்சிதம் ஆகியோரின் வழிகாட்டுதல்படி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் R. சுரேஷ் பிரமில் குமார் தலைமை தாங்கினார். கம்பம் SAC பெண்கள் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் R. தமிழ்செல்வி சிறப்பு விருந்தினராக பங்கெடுத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் J. ஜெனிக்ஸ் ரினோ ஏற்பாடு செய்திருந்தார்.

கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply