“எனது தந்தை ஆற்றிய சமூகப்பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன்” : விஜய்வசந்த்

தனது தந்தை ஆற்றிய சமூகப்பணியையும், அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் என மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார். காந்தி பிறந்தநாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மாநகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினருடன் சென்று விஜய்வசந்த், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு, அவரது நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய் வசந்த் கூறும்போது, “உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தனது தந்தை இந்த தொகுதி மக்களுக்காக செய்த சமூக மற்றும் அரசியல் பணிகளை தொடர்ந்து செய்து அவரது விருப்பத்திற்கு ஏற்ப பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவேன்” என்றும் கூறினார்.

Leave a Reply