கொட்டாரத்தில் பிரதமர் மோடி உருவ பொம்மை எரித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்… 25 பேர் கைது…!

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து கொட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 1 இளம்பெண் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறசென்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ராகுல்காந்தியை அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்ற போலீசின் கோரிக்கையை மீறி சென்றதால் ராகுல்காந்திக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த செயலை கண்டித்து கொட்டாரம் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மாநில ஒபிசி பிரிவு செயலாளர் ஸ்ரீநிவாசன், வட்டார தலைவர் முருகேசன், மாவட்ட பொதுசெயலாளர் தாமஸ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.

பிரதமர் மோடி உருவ பொம்மை மற்றும் மற்றும் உ.பி மாநில முதல்வர் யோகிஆதித்யநாத்தின் படத்தை தீயிட்டு பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் . ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஐக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் ஆர்பாட்டம் மற்றும் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒபிசி பிரிவு செயலாளர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply