நவராத்திரி விழாவுக்கு சுவாமி விக்கிரங்கள் பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டும் இந்து முன்னணி சார்பில் கலெக்டரிடம் மனு

நவராத்திரி விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து சுவாமி விக்கிரகம் வாகனத்தில் பக்தர்கள் தோளில் சுமந்து குமாரகோயில் சென்று குமாரகோயில் இருந்து பத்மநாபபுரம் சென்று சுவாமி விக்கிரங்களை பத்மநாபபுரம் அரண்மனையில் வைத்து கேரளா அரசும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சேர்ந்து பாரம்பரிய உடை வாள் மாற்றுதல் நடக்கிறது.

இதில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அதன்பிறகு களியக்காவிளைக்கு சென்று அங்கிருந்து கேரளாவுக்கு சுவாமி விக்கிரங்கள் செல்கிறது. அதன்படி வரும் 14 ம் தேதி சாமி ஊர்வலம் பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு போவது வழக்கம். இந்த ஆண்டு 16 ம் தேதி வாகனத்தில் சுவாமி விக்கிரங்களை ஏற்றி களியக்காவிளைக்கு கொண்டு செல்வது போல் கூறப்படுகிறது.

எந்த காரணம் கொண்டும் சுவாமி விக்கிரங்கள் வருடம் தோறும் நடப்பது போல் பாரம்பரிய முறைப்படி தான் நடக்க வேண்டும். வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லவிட மாட்டோம். கோயிலில் இருந்தே எடுக்க விடமாட்டோம் இதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்தோம் என்று இந்து முன்னனி கோட்ட செயலாளர் மிசா சோமன் தெரிவித்தார்.

Leave a Reply