மயிலாடி மிஷன்விளையில் பேரூர் திமுக மற்றும் திமுக இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

குமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாடி மிஷன்விளையில் பேரூர் திமுக மற்றும் திமுக இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பேரூர் செயலாளர் சாய்ராம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம்பிள்ளை, அவைத்தலைவர் சுவாமிதாசன், பொருளாளர் ஏசுபாதம், ஒன்றிய பிரதிநிதி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆஸ்டின் எம்எல்ஏ முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதிநிதிகள் ஆனந்த், மதன், தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் சுபாஷ், இளைஞர் அணி ஜெரோம் சுனில், கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply