சாலை சீரமைக்கும் பணி ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி 12-வது வார்டில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை தொடர்ந்து ஆஸ்டின் எம்.எல்.ஏ., கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாநகராட்சி ஆணையரை சந்தித்து சாலையை சீரமைக்கும்படி வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில் குளத்தூர் சாலையை சீரமைக்க ரூ.24 லட்சம், குளத்தூர் சி.எஸ்.ஐ. ஆலய சானல் கரை சாலையை சீரமைக்க ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம், சபையார் குளம் முதல் ஒய்.ஜெ.எஸ். கார்டன் வரை செல்லும் சாலையை சீரமைக்க ரூ.23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பணிகளை ஆஸ்டின் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், நகர மாணவரணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாக்தாத், 12-வது வார்டு தி.மு.க. செயலாளர் சாகுல், நிர்வாகிகள் செந்தில்குமார், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply