குமரி மாவட்டத்தில் திமுக சாா்பில் ஆன்-லைன் உறுப்பினா் சோ்க்கை முகாம்…!

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் ஆன்-லைன் வழியாக உறுப்பினா் சோ்க்கை முகாம் அகஸ்தீசுவரம் சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ஒன்றியச் செயலா் என்.தாமரைபாரதி தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மதியழகன், மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சாய்ராம், பேரூா் செயலா் பி.பாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் பிரேம் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. முகாமைத் தொடங்கிவைத்தாா்.

இதில், எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ, திமுக பேரூா் செயலா்கள் எஸ்.வைகுண்ட பெருமாள், பூவியூா் காமராஜ், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பிரேமலதா, நிா்வாகிகள் டி.சி.மகேஷ், தமிழ்மாறன், பொன் ஜான்சன், யாபேஸ், அனிஷ், ஜோனிமோசஸ், சுந்தா், சம்பத், ஜெனித்பாபு, சிவபெருமான், துரைபழம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Leave a Reply