எஸ்பி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி கருப்பு நிற பேண்ட் அணிந்து பங்கேற்பு…!

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் மோதியது. அம்பத்தி ராயுடு நின்று அடித்து சென்னையை வெல்ல வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் இரண்டாம் போட்டியில் மோதியது ராஜஸ்தான் ராயல் அணியுடன். இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை ராஜஸ்தான் பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது. இன்று டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறார். இதனால், முதலில் டெல்லி வீரர்கள் பேட்டிங் ஆட விருக்கிறார்கள். பிரித்வி ஷா மற்றும் ஷிகர்தவான் இணைந்து தொடக்கத்தை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணி வீரர்கள் கருப்பு நிற பேண்ட் அணிந்து போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply