அழகியமண்டபம் பகுதியில் வாகனத்தில் ரேசன் அரிசி கடத்த முயற்சி…!

குமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் நேற்றிரவு தக்கலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்றின் மீது சந்தேகமடைந்த போலீசார் வாதனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த வாகனத்தில் ரேசன் அரிசி கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ,கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிரோடு பகுதியை சேர்ந்த அருண்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய வாகன டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply