‘நீட்’ தேர்வுக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் முக கவசம்

தமிழக சட்டசபை கூட்டத்தில் நேற்று பங்கேற்பதற்காக கலைவாணர் அரங்கத்திற்கு வந்த தி.மு.க. உறுப்பினர்கள் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான வாசகம் அடங்கிய முக கவசத்தை அணிந்து வந்தனர். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு அங்கு காரில் வந்து இறங்கினார். அவரும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்திருந்தார்.

தி.மு.க. உறுப்பினர்கள் அணிந்திருந்த முககவசத்தில், “நீட் தேர்வை ரத்து செய்” என்று தமிழிலும், “நீட் தேர்வை தடை செய். தமிழக மாணவர்களை காப்பாற்று” என்று ஆங்கிலத்திலும் வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

Leave a Reply