தே.மு.தி.க.வின் 16-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அழகம்மன் கோவிலில் சிறப்பு பூஜை…!

தே.மு.தி.க.வின் 16-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ஜெயபிரபாகர், தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ஆதிலிங்கபெருமாள், நகர செயலாளர் மணிகண்டன், அணி செயலாளர்கள் பொன்.செல்வராஜன், ஆர்.வி.நாராயணன், செல்வகுமார், நிர்வாகிகள் பாக்கியவதி, பரமராஜா, சுடலையாண்டிபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply