வெள்ளமடம் கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.1 கோடியில் திருமண மண்டபம் தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்…!

வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரூ.1 கோடியில் திருமண மண்டபம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதன் சங்க வளாகத்திலேயே திருமண மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் எம்.டி.என். ஷேக் தலைமை தாங்கினார்.

மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி, நாகர்கோவில் சரக துணைப் பதிவாளர் சங்கரன், மேலாண்மை இயக்குனர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் திருமண மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், பீமநகரி ஊராட்சி தலைவர் சஜீதா சுப்பிரமணியன், யூனியன் கவுன்சிலர் ஞானபாய், கூட்டுறவு சங்க செயலாளர் பத்மாவதி, துணைத் தலைவர் சண்முகசுந்தர், மாவட்ட அ.தி.மு.க இணை செயலாளர் லதா ராமச்சந்திரன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் தர்மர், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கே.சி.யூ.மணி மற்றும் சங்க இயக்குனர்கள், பீம நகரி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply