வியாதிகளை கட்டுப்படுத்தும் “வேப்பம்பூ ரசம்” செய்வது எப்படி?

ரசத்தில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது புளி ரசம், தக்காளி ரசம் தான். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ரசம் செய்ய நினைத்தால், வேப்பம்பூ ரசத்தை செய்து சாப்பிடுங்கள். இந்த ரசம் உடலில் உள்ள பூச்சிகள், புழு போன்றவற்றை அழித்துவிடும். மேலும் கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும் இதனை மதிய வேளையில் உணவிற்கு முன் சூப்பாகவும் குடிக்கலாம். சரி, இப்போது அந்த வேப்பம்பூ ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

செய்யத் தேவையானவை:

  • வேப்பம்பூ – 15 கிராம் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்
  • புளி – எலுமிச்சை தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 2
  • பெருங்காயம் – கொஞ்சம்
  • துவரம் பருப்பு – ஒன்றரை தேக்கரண்டி
  • கொத்தமல்லி , கருவேப்பிலை – தேவைக்கேற்ப கொஞ்சம்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் வற்றல் – 2
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை
2 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து அதில் தக்காளிப் பழங்களை போட்டு நன்கு பிசைய வேண்டும்.

வெந்தயம், துவரம் பருப்பு, இரண்டையும் லேசாக வறுத்துப் பொடி செய்து புளித்தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து வரும் போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் போட்டு கடுகு பொரிந்ததும் காயம், கறிவேப்பிலை, போட்டுத் தாளித்து கொட்டவும்.

பின்பு வேப்பம்பூவை எண்ணெயில் வறுத்து கொதிக்கும் ரசத்தில் கொட்டி ரசத்தை கீழே இறக்கி வையுங்கள்.

அதனுடன் கொத்தமல்லி தழையை கிள்ளி சேர்த்து மூடி வைக்கவும்.

அவ்வளவு தான் வேப்பம்பூ ரசம் ரெடி…!

Leave a Reply