நாகராஜா கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஆவணி மாத கடைசி கிழமையை முன்னிட்டு பக்தர்களின் வேண்டுதல் வழிபாடு…!

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள சிறப்பு வாய்ந்த நாகராஜா கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஆவணி மாத கடைசி கிழமையை முன்னிட்டு பக்தர்களின் வேண்டுதல் வழிபாடு இன்று நடைபெற்றது. இதில் ஊரடங்கு தளர்வு விதிமுறைகளின்படி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமை விழாக்கள் சிறப்பாகும்.

இந்த நாட்களில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்கள் குழந்தைகளின் கல்வி திருமண தடை நீங்க உள்ளிட்ட வேண்டுதல்களை நாகராஜா கோவிலின் முன் வைப்பது வழக்கம்.

இங்குள்ள 500க்கும் மேற்பட்ட நாகர் சிற்பங்களுக்கு உப்பு, மூட்டை, மஞ்சள் தூள், பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இந்நிலையில் காரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில் கடந்த வாரத்திலிருந்து கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

எனினும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு கூட்டம் கோவிலுக்கு வரவில்லை. இந்நிலையில் ஆவணி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் நாகாராஜா கோவிலில் குவிந்தனர்.

இவர்கள் அனைவரும் கரோனா ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளின்படி சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகத்தில் மாஸ்க் அணிந்தும் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.

Leave a Reply