கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 5 டன் ரேஷன் அரிசி கடத்தல் : ஓட்டுநர் தப்பியோட்டம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கடத்தலை தடுக்க பறக்கும் படை மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சொகுசு வாகனம் ஒன்று சைகை காட்டிய போது நிற்காமல் சென்றது பின்தொடர்ந்து வாகனத்தை விரட்டிச் சென்றபோது படந்தாலுமூடு பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் ஓடினார்.

அதைத் தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது உள்ளே சிறு சிறு மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று தொடர் வாகன சோதனையின்போது மினி டெம்போ ஒன்றில் மீன் ஏற்றி வரும் வண்டியை போல் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மீன் பெட்டிகளுக்கு அடியில் சுமார் மூன்றரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இரண்டு வாகனங்கள் மற்றும் வாகனங்களில் இருந்த ரேஷன் அரிசியை காப்பி காடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

Leave a Reply