கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடை தேர்தலில் எதிர்கட்சிகள் பயந்து தான் வசந்தகுமார் இல்லாத இடத்தை உடனே நிரப்புவதற்காக அவசரப்படுகிறார்கள்…!

மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் அவர்களின் 17 வது நாள் அனுசரிப்பு குமரி மாவட்டம் தெங்கப்புதூரில் மவுன ஊர்வலமாக நடைப்பெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது தந்தை மீது பற்று வைத்த ஒவ்வொரு வரும் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடத்துகின்றனர். அவர்கள் என் தந்தை மீது மதிப்பு வைத்துள்ள காரணத்திற்காக நான் கலந்து கொண்டுள்ளேன்.

அரசியலுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கும் இப்போது விருப்பம் இல்லை என் குடும்பத்தினரோடு சேர்ந்து ஆலோசித்தப் பிறகு தான் முடிவு அறிவிப்பேன் என்றும், என் அப்பா வசந்தகுமார் தொகுதி மக்களுக்கு செய்த செயல்கள் சொல்லும் எதிர்கட்சிகள் பயந்து தான் வசந்தகுமார் இல்லாத இடத்தை உடனே நிரப்புவதற்காக அவசரப்படுகிறார்கள்.

கண்டிப்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றிப்பெறும் இதற்கு எந்தவித மாற்றுக்கருத்து இருக்க முடியாது.என் தந்தை விட்டு சென்ற பணிகளை ஒரு மகனாக குடும்பத்தில் ஒருவனாக தொடருவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply