நாகர்கோவில்-சங்குத்துறை பீச்சுக்கு செல்லும் சாலையில் ரூ.7.60 லட்சத்தில் பாலம் பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு…!

நாகர்கோவில்-சங்குத்துறை பீச்சுக்கு செல்லும் சாலையில் முகிலன்விளை முத்தாரம்மன் கோவில் பகுதியில் பழைய பாலம் ஒன்று சேதமடைந்து இருந்தது. இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் அந்த பகுதி மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து புதிய பாலம் கட்ட ரூ.7.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணி தொடங்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியை ஆர்.பி.ஆர். நிறுவனத்தினர் மேற்கொண்டு உள்ளனர்.

இந்தநிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கீதாகுமாரி, உதவி பொறியாளர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாலம் பணியை ஒரு வாரக்காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக ஆர்.பி.ஆர். நிறுவனத்தின் தலைவர் ரா.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply