குமரியில் அ.தி.மு.க பிரமுகரின் தந்தை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

வட்டக்கோட்டை அருகே அ.தி.மு.க நிர்வாகியின் தந்தை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டம் வட்டக்கோட்டையை அடுத்துள்ள லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமையா (75).விவசாயி.இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் .இதில் ஒருவர் அ.தி.மு.க வில் முக்கிய பதவியில் உள்ளார்.

இந்நிலையில் ராமைய்யா வட்டக்கோட்டையை அடுத்துள்ள பாட்டுக்குளம் பகுதியில் இன்று காலை வாத்து கோழிகளை மேய்த்துக் கொண்டிருந்தார் .அப்போது அருகிலுள்ள மின்கம்பத்தின் பக்கவாட்டு கம்பியை எதிர்பாராத விதமாக தொட்டுள்ளார்.

இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply