கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்பு சுசீந்திரம் போலிஸார் விசாரனை…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள முகிலன்விளை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சீனிவாசன். இவரது மூன்றாவது மகன் சிவனேஷ் (22) மதுரையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 4 ம் ஆண்டு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதால் மருத்துவ கல்லூரி மாணவன் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில்தான் இருந்துள்ளார் இந்நிலையில் இன்று காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்க்காக வீட்டிற்கு பின்புறம் உள்ள தோப்பிற்கு சென்ற மருத்துவ கல்லூரி மாணவன் வெகு நேரமாகியும் திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தந்தை சீனிவாசன் மகனை தேடி தோப்பிற்கு சென்று தேடியுள்ளார் .

அங்கு100 அடி ஆழமுடைய கிணற்றில் மருத்துவ கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சுசீந்திரம் போலிஸார் மற்றும் தீயனைப்பு துறைக்கும் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸாரும் தீயனைப்பு துறையினரும் கிணற்றில் பிணமாக மிதந்த மருத்துவ கல்லூரி மாணவன் சிவனேஷ் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

கல்லூரி மாணவன் கால்தவறி விழுந்ததார அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களில் சுசீந்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மருத்துவ கல்லூரி மாணவன் கிணற்றில் விழுந்து பலியான.சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply